நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உங்களுக்கு கிடைக்காமல் போவதால் உடலுக்கு சோர்வு ஏற்படுகிறது.
கசகசா அல்லது பாப்பி விதைகள் ஃபோலேட், தியாமின் மற்றும் பாந்தோத்தேனிக் அமிலத்தின் சிறந்த மூலமாகும் மற்றும் பி வைட்டமின்கள் உள்ளன. இந்த சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை அள்ளிக் கொடுக்கின்றன
ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றூம் நார்ச்சத்தும் உள்ளது, இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பாதாம் அதிக கொழுப்பைக் எரிக்கிறது. இதனால், உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.
இரும்புச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ள உலர் திராட்சையை உண்பதால், உடலில் இரத்த சோகை நீங்கி, சோர்வு மற்றும் பலவீனம் நீங்கும்.
வெந்தயத்தில் உள்ள புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் உடலுக்கு ஆற்றலையும் வலிமையையும் கொடுப்பதோடு, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது
இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.