பூண்டு சாப்பிட்டு வந்தால் உயிரணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.
பூண்டு சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். இது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிகம் உதவும்.
பூண்டு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது.
பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது என்றாலும், சிலர் இதனை தவிர்ப்பது நல்லது.
பூண்டு நெஞ்செரிச்சல் மற்றும் அமில ரிஃப்ளக்ஸை மோசமாக்கும். எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.
பூண்டு இரத்தத்தை மெல்லியதாக மாற்றும். எனவே இவற்றை எடுத்துக்கொள்ளும் முன்பு மருத்துவரை அணுகுவது நல்லது.
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் பச்சை பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டாம்.
ஒரு சிலருக்கு பூண்டின் ஒவ்வாமை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.