இரத்த சர்க்கரை அளவை குறைத்து, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்து, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில பச்சை இலைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தினமும் 5-10 வேப்பிலைகளை மென்று சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு மிக நல்லது. இது இன்சுலின் சென்சிடிவிட்டியை சீராக்குவதோடு இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கிறது.
சுகர் நோயாளிகள் தினமும் கொத்தமல்லியை உணவில் சேர்க்க வேண்டும். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதோடு செரிமானத்தையும் சீராக்கும்.
மாவிலையில், நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் இன்னும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இவை நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும்.
தினமும் வெற்றிலையை நன்றாக கடித்து சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
வெந்தயம், வெந்தய பொடி, வெந்தயக் கீரை ஆகிய அனைத்தும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. அடிக்கடி உணவில் வெந்தயக் கீரையை சேர்ப்பது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
துளசி இலைகளை தினமும் கடித்து சாப்பிட்டால், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கலாம். துளசி தேநீரும் உடலுக்கு நல்லது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.