எச்சரிக்கை! 'இந்த' பிரச்சனைகள் இருந்தால் மஞ்சள் பால் வேண்டாமே..!!

Vidya Gopalakrishnan
Nov 17,2023
';

ஊட்ட சத்து

மஞ்சள் பாலில் புரதம், கால்சியம், வைட்டமின் பி போன்ற வைட்டமின்கள் போன்ற பல அத்தியாவசிய ஊட்ட சத்துக்கள் காணப்படுகின்றன. ஆனால் அனைவருக்கும் மஞ்சள் பால் ஏற்றதாக இருக்கும் என கூற இயலாது.

';

மஞ்சள் பால்

சிலருக்கு மஞ்சள் பால் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எந்தெந்த நபர்கள் மஞ்சள் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்

';

இரத்த சோகை

மஞ்சள் பால் உட்கொள்வது உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சும் சக்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்காமல் போகலாம்.

';

செரிமான பிரச்சனை

வயிற்றில் வாயு, வீக்கம், நெஞ்செரிச்சல் போன்ற செரிமானப் பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால், மஞ்சள் பால் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

';

இரத்த சர்க்கரை

மஞ்சளில் குர்குமின் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை குறைக்கும். எனவே, குறைந்த இரத்த சர்க்கரை உள்ள நோயாளிகளின் பிரச்சனை அதிகரிக்கலாம்.

';

சிறுநீரக நோயாளிகள்

மஞ்சளில் ஆக்சலேட் இருப்பதால், சிறுநீரகம் தொடர்பான நோய்கள் தீவிரமடைந்து, உங்களுக்கு கடுமையான பிரச்சனைகள் ஏற்படலாம்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

';

VIEW ALL

Read Next Story