தனியா நின்னாலும் கெத்தா நிக்கணுமா? தினமும் தனியா சாப்பிடுங்க

Sripriya Sambathkumar
Nov 18,2023
';

மல்லி விதைகள்

மல்லி விதைகளை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் ஏற்படுகின்றன? இவற்றை எப்படி உட்கொள்வது?

';

ஊட்டச்சத்து

மல்லி விதைகளில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே ஆகியவை உள்ளன.

';

கூந்தல்

கூந்தலுக்கு தடவும் எண்ணெயில் மல்லி தூளை கலந்து வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்தல் பிரச்சனை குறையும், வேர்களை வலுப்படும்.

';

பருக்கள்

கொத்தமல்லி விதைகளை தண்ணீர் விட்டு அரைத்து, ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் முல்தானி மிட்டி மற்றும் தேன் விருப்பப்படி சேர்த்து பேஸ்ட் செய்து தடவி வந்தால் பருக்கள் குணமாகும்.

';

நீரிழிவு நோய்

கொத்தமல்லி விதை நீர் இரத்த குளுக்கோஸைக் குறைத்து, இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. இந்த நீரின் நுகர்வு LDL ஐக் குறைத்து HDL ஐ அதிகரிக்கிறது.

';

சரும பாதுகாப்பு

தனியா தோல் அழற்சி, அரிப்பு மற்றும் வெடிப்புகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மல்லி விதைகள் வாய் புண்கள் மற்றும் காயங்களுக்கும் சிகிச்சை அளிக்கின்றன.

';

சளி மற்றும் காய்ச்சல்

காயங்களை குணப்படுத்த உதவுவதோடு, தனியா சளி மற்றும் காய்ச்சலுக்கு எதிராகவும் நம்மை பாதுகாக்கின்றது. கொத்தமல்லியில் பல அத்தியாவசிய வைட்டமின்கள் உள்ளன. இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவுகிறது.

';

செரிமானம்

தனியா செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கொத்தமல்லி விதைகளில் ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகள் மற்றும் உணவு நார்ச்சத்து உள்ளது.

';

VIEW ALL

Read Next Story