தூக்கம் நம் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் 7 - 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை.
ஆனால் அளவிற்கு அதிகமான தூக்கம் கவலை தரக்கூடிய விஷயம் என்கின்றனர் மருத்துவர்கள்.
அளவிற்கு அதிகமான தூக்கம், உடலில் சோம்பலை ஏற்படுத்துவதோடு மூளையை மந்தமாக்கும்.
அதிக அளவிலான தூக்கம், மன அழுத்தத்தை அதிகரித்து, குழப்பமான உணர்வை ஏற்படுத்தலாம்.
அளவிற்கு அதிக தூக்கம், ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தி தலைவலியை உண்டாக்குகிறது.
அதிக நேரம் போது உங்களது தசைகள் அனைத்தும் சோர்வாகும். இதனால் முதுகுவலி பிரச்சனைகள் ஏற்படும்.
அதிக அளவிலான தூக்கத்தினால், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்காது. மாறாக சோர்வு அதிகரிக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)