ஆற்றல் மற்றும் செயல் திறன் சிறப்பாக இருக்க, உடல் வலிமை எனப்படும் ஸ்டாமினா சிறப்பாக இருக்க வேண்டும்.
கார்போஹைட்ரேட்டுகளை மெதுவாக வெளியிட்டு, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் திறன் கொண்ட ஓட்ஸ் உடல் வலிமைக்கு சிறந்தது.
பொட்டாசியம் சத்து நிறைந்த வாழைப்பழம், தசைகளை வலுவாக்கி உடல் வலிமையை அதிகரிக்கிறது.
இரும்பு சத்து நிறைந்த கீரை, ரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடல் முழுவதும் ஆக்சிஜன் கிடைக்க உதவுகிறது.
ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதம் நிறைந்த நட்ஸ் என்னும் உலர் பழங்கள், ஆற்றலை அபரிமிதமாக வழங்குகிறது.
புரதம் நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் நிறைந்த குயினோவா அள்ளிக் கொடுக்கும் உணவாகும்.
விட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு ஆற்றலை அள்ளி வழங்குகிறது.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த சியா விதைகள், ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் சிறந்த உணவாகும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.