நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஆற்றல் பானங்கள், சோடா போன்றவற்றில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், இவற்றை குடிப்பதை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும். இவற்றால் குளுக்கோஸின் அளவு வேகமாக அதிகரிக்கின்றது.
வெள்ளை பிரெட் மற்றும் இது போன்ற பேஸ்ட்ரி உணவுகளை சுகர் நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. இவற்றை செய்ய மைதா பயன்படுத்தப்படுவதால் இவற்றின் கிளைசெமிக் குறியீடு மிக அதிகமாக இருக்கும்.
எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்வது ஆபத்தாகலாம். இவற்றின் காரணமாக இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதோடு கொலஸ்ட்ரால், வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.
ஹாட் டாக் போன்ற இறைச்சி வகைகளை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இவற்றில் உப்பு, சர்க்கரை ஆகியவற்றின் அளவு மிக அதிகமாக இருக்கின்றன.
பாலிஷ் செய்யப்படும் வெள்ளை அரிசியில் நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவை நீக்கப்படுவதால் இது உயர் கிளைசெமி குறியீடு கொண்ட உணவாக உள்ளது. இதன் காரணமாக இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சாக்லேட், கேண்டி, இனிப்புகள் போன்றவை சுகர் லெவலை மிக வேகமாக அதிகரிக்கக்கூடும். நீரிழிவு நோயாளிகள் இவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.