டீ இந்தியாவில் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாகும், இது அனைவராலும் விரும்பப்படுகிறது.
காலையில் எழுந்தவுடன் டீ குடிப்பது பலருக்கும் விருப்பமான ஒன்று. உடனடி புத்துணர்ச்சியை தருகிறது.
பிஸ்கட், சமோசா மற்றும் பிற தின்பண்டங்களுடன் சேர்த்து டீ குடிப்பது வழக்கம்.
இருப்பினும், சில உணவுகளுடன் டீ குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
எந்த எந்த உணவுடன் டீ சேர்த்து குடிக்க கூடாது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பச்சை காய்கறிகளுடன் டீ குடிக்க கூடாது. இவை இரும்பு உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்தும்.
டீயுடன் எலுமிச்சைப் பழத்தை சேர்த்து கொள்ள கூடாது. இது நெஞ்செரிச்சலை அதிகரிக்கும்.
டீயுடன் பருப்பு வகைகளை உட்கொள்வது ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
டீ மற்றும் மஞ்சள் சேர்ந்தால் அதன் ரசாயன கலவைகள் செரிமான அமைப்பை பாதிக்கும்.