கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பியான தைராய்டு, நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தைராய்டு பிரச்சனையினால் உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது. எனினும் உணவு முறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் அதனை எளிதில் கட்டுப்படுத்தலாம்.
சோயா உணவுகளில் காய்ட்ரோஜன் உள்ளதால், இது தைய்ராய்டு ஹார்மோன் உற்பத்தியை பாதிக்கும். எனவே இதனை அளவோடு உட்கொள்ள வேண்டும்.
கேழ்வரகு சிறந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியம் என்றாலும், ராகியை அதிக அளவில் எடுத்துக் கொள்வது தைராய்டு பிரச்சனையை அதிகரிக்கும்.
தைராய்டு பிரச்சனை இருந்தால், காபி அதிகம் உட்கொள்வதை உட்கொள்வதைத் தவிர்க்கவும். காபியில் உள்ள காஃபின் பிரச்சனையை அதிகரிக்கும்.
ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் போன்றவை உடலில் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.