பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் அதிக வலியால் அவதிப்படுகிறார்கள். சில நேரங்களில் வலியுடன் இரத்தப்போக்கு பிரச்சனையும் ஏற்படுகின்றது.
மூல நோய்க்கு நிவாரணம் அளிக்கும் சில இயற்கையான வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மூல நோய் வலி மற்றும் எரிச்சலில் இருந்து நிவாரணம் அளிக்க தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இது வீக்கத்தையும் குறைக்கிறது. தேங்காய் எண்ணெயில் சிறிது மஞ்சள் தூள் கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.
கடுகு எண்ணெயுடன் மஞ்சள் தூள் கலந்து, தடவ வேண்டும். கடுகு எண்ணெயில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு கூறுகள் வலி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
கற்றாழை மற்றும் மஞ்சள் இரண்டையும் சம அளவில் எடுத்து, இரண்டையும் கலந்து தடவவும். இது வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
பைல்ஸ் நோயாளிகள் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க வெங்காய சாற்றை தடவலாம். வலியைக் குறைக்கும் அழற்சி எதிர்ப்பு கூறுகள் இதில் உள்ளன. வெங்காயத்துடன் சிறிது மஞ்சள் கலந்து பயன்படுத்தவும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.