வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் வைக்கக்கூடிஅ அலங்காரப் பொருட்களில் ஒன்றான புத்தர் சிலை, அமைதியையும் ஆனந்தத்தையும் கொண்டு வந்து சேர்க்கும்.
தியானம் செய்யும் புத்தர், சாய்ந்த புத்தர், வணங்கும் கோலத்தில் புத்தர், சிரிக்கும் புத்தர் என பலவிதமான புத்தர் சிலைகள் கிடைக்கின்றன
துன்பத்தையும் துயரத்தையும் சேகரிக்கும் சிரிக்கும் புத்தர், அதை தன்னிடம் உள்ள சாக்குப்பையில் போட்டு எடுத்துச் செல்வார் என்றும், நிம்மதியையும் நேர்மறை ஆற்றலையும் தருவார் என்றும் நம்பப்படுகிறது
மின்சாதன பொருட்களின் மீது புத்தர் சிலையை வைப்பதால் அவை நேர்மறை ஆற்றலை வழங்குவதில் தடை ஏற்படலாம்
நேர்மறை ஆற்றல் வரும் இடங்களில் புத்தர் சிலையை வைக்கலாம். ஸ்டோர் ரூம், குளியலறை, வாஷ்பேசின் அருகில் புத்தர் சிலையை வைக்கக்கூடாது
வாஸ்துப்படி புத்தர் சிலையை தாழ்வான இடங்களில் வைக்கக்கூடாது. புத்தர் சிலை, ஓருவரின் கண் மட்டத்திற்கு மேல் வைக்கப்பட வேண்டும்
புத்தர் சிலை வீட்டின் உட்புறத்தை நோக்கியவாறு வைக்கப்பட வேண்டும் கிழக்கு திசையில் வைப்பது நல்லது
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது