பால் வடியும் முகம் குழந்தைகளுக்கு மட்டும் தான் வாய்க்குமா? உங்கள் முகமும் குழந்தையின் மென்மையான சருமத்தைப் போல பொலிவுடன் ஜொலிக்க பாலை இப்படி பயன்படுத்தி ஃபேஸ்பேக் போடுங்க..
பால், அனைவருக்குமான உணவுப்பொருள். பசியைப் போக்குவதற்கு மட்டுமல்ல, ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிரம்பியுள்ள பால் அழகையும் அதிரடியாக மேம்படுத்தும்
உடல் முழுவதையும் அழகாக்க, பாலில் குளிக்கும் வழக்கம் அரச குடும்பத்தில் இருந்தது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. பாலில் குளிக்க வேண்டாம், அதை சருமத்தில் எப்படியெல்லாம் பயன்படுத்தினால் அழகு உங்கள் வசமாகும்? தெரிந்துக் கொள்வொம்
பால் எப்படி பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளதோ அதேப் போல கற்றாழையும் அதிஅற்புதமான ஆரோக்கிய பலன்களைக் கொண்டது. பாலுடன் இணைந்தால் கற்றாழையின் மருத்துவ மற்றும் அழகுப் பண்புகள் பல மடங்கு அதிகரிக்கும். பாலுடன் கற்றாழை சாற்றை நன்கு கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து கழுவினால் ஜொலிக்கும் முகத்தைப் பெறலாம்
மஞ்சளுடன் பால் கலந்தால் அது உடலின் உள் உறுப்புகளுக்கு மட்டுமல்ல, வெளியில் தோற்றமளிக்கும் சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். பாலுடன் மஞ்சள் கலந்து சருமத்தில் பூசினால் கொஞ்சும் அழகு உங்களிடம் தஞ்சமடையும்
இது மிகவும் அற்புதமான காம்பினேஷன். தேனும் பாலும் சேர்த்து குடித்தால், சுவைமிக்க ஆரோக்கியமான பானமாக இருக்கும். பாலுடன் இணையும் தேன் உங்கள் அழகை மேலும் பளபளப்பாக்கி அனைவரையும் கவர்ந்திழுக்கும்
சருமம் அழகாய் மிளிர, பாலுடன் சந்தனம் கலந்து தட, காய்ந்த பின் குளிர்நீரால் கழுவினால் போதும்
இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை