Masala Ban: இந்திய மசாலாக்களுக்கு தொடரும் உலகளாவிய சிக்கல்! MDH Everest பிராண்டுகளுக்கு தடை!

Malathi Tamilselvan
May 17,2024
';

நேபாளம்

எவரெஸ்ட் மற்றும் எம்டிஎச் ஆகிய இந்தியாவின் பிரபல மசாலா நிறுவனங்களின் மசாலாப் பொருட்களுக்கு நேபாளம் தடை விதித்துள்ளது. இவர்களது மசாலா பாக்கெட்டுகளில் அதிகப்படியான எத்திலீன் ஆக்சைடு ரசாயனம் இருப்பதான செய்திகளின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது

';

மசாலாக்கள் ஏற்றுமதி

இதற்கு முன்னதாக சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நாடுகளில் மசாலா இறக்குமதிக்கு தடை விக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனை அடுத்தே நேபாளமும் இந்த முடிவை எடுத்துள்ளது

';

எத்திலீன் ஆக்சைடு

புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் என்பதால், சோதனையில் எத்திலீன் ஆக்சைடு இருந்ததாக கண்டறியப்பட்ட மசாலாக்களுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்படலாம்

';

இந்திய மசாலா வாரியம்

தடை நடவடிக்கை அடுத்து, இந்திய மசாலா ஏற்றுமதியின் பாதுகாப்பையும் தரத்தையும் உறுதிப்படுத்த இந்திய மசாலா வாரியம் (The Spice Board of India) நடவடிக்கை எடுத்துள்ளது.

';

எவரெஸ்ட்

தற்போது நேபாளத்தில் தடை விதிக்கப்படுவதற்கு முன்னதாக சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கிலும் எவரெஸ்ட் மசாலாவுக்கு தடை விதிக்கப்பட்டது

';

கண்காணிப்பு

மசாலாப் பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு இருப்பதை வழக்கமான கண்காணிப்பு ஆய்வின் போது கண்டறிந்துள்ளதாக தொடர்புடைய நடுகள் தெரிவித்தன

';

இந்திய மசாலா

உலகளவில் இந்திய மசாலாக்கள் பிரபலமானவை, அனைவராலும் விரும்பி வாங்கப்படுகின்றன

';

மசாலா நிறுவனம் விளக்கம்

ஒருசில குறிப்பிட்ட மசாலா வகைக்கு மட்டுமே தடை இருப்பதாகவும், அனைத்து வகை மசாலாக்களும் தடை விதிக்கப்படவில்லை என, மசாலா நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

';

ஆய்வுக்கு உத்தரவு

வெளிநாட்டில் இந்திய மசாலா பொருட்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் எல்லா நிறுவன மசாலா பொருட்களின் மாதிரிகளையும் ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

';

பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story