மனநோய் என்பது என்ன? தெளிவான விளக்கம் இங்கே..!
மனநோய் என்றாலே அதை குணப்படுத்த முடியாது, அதற்கு சிகிச்சை பலனளிக்காது என புரிந்து கொண்டிருக்கிறோம்
மனநல ஆரோக்கியமின்மைகள் மற்றும் தற்காலிக பிரச்சினைகள் போன்றவற்றை நாம் மனநோய்களுடன் குழப்பிக்கொள்கிறோம்
அதனால் தான் அனைத்திற்கும் ஒரே வகையான தீர்வை எதிர்பார்க்கிறோம். முதலில் Counselling என்பது ஆலோசனை. ஆலோசனையில் குணப்படுத்துவது நோக்கமல்ல
ஏனென்றால் ஆலோசனை தேவைப்படுபவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டவர்களோ அல்லது மன நோயாளிகளோ அல்ல.
ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள வைப்பதும் அதிலிருந்து மீள்வதற்கான வழிகளை கண்டடைய வைப்பதுதான் ஆலோசனை.
ஓரளவிற்கு வாழ்க்கை மீதான பரந்துபட்ட பார்வையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானால் யாருக்கு வேண்டுமானால் ஆலோசனை கொடுக்கலாம்.
முக்கியமான விஷயம் மன ஆரோக்கியமின்மை என்றால் என்ன? மனநோய்கள் என்றால் என்ன? என தெரிந்து கொள்ள வேண்டும்
1. Biological, அதாவது உயிரியல் காரணங்களால் வரக்கூடிய மனநோய்கள். 2. Psychological, உளவியல் காரணங்களால் வரக்கூடிய மனநோய்கள்.
Biological பிரச்சினைகளுக்கு biological சிகிச்சை மற்றும் Psychological பிரச்சினைகளுக்கு psychological சிகிச்சை.
Biological பிரச்சினைகளுக்கு psychological சிகிச்சை கொடுத்தாலோ அல்லது psychological பிரச்சினைகளுக்கு biological சிகிச்சை கொடுத்தாலோ அதனால் பயன் ஒன்றும் இல்லை.
மனநோய்களை பொறுத்த வரை மிக சாதாரணமாக குணமாகக்கூடிய பிரச்சினைகளில் இருந்து வாழ்நாள் முழுவதும் சிகிச்சை தேவைப்படும் நோய்கள் வரை ஏராளமான நோய்கள் இருக்கின்றன.
மிக சாதாரண மனச்சோர்வும், மனப்பதட்டமும் தான் மிக அதிகமான சுமையை கொடுக்கின்றன, இவற்றை மிக எளிமையாக சிகிச்சையளித்து குணப்படுத்த முடியும்.
மனரீதியாக சோர்வடையும் போது ஒருவரின் உதவியை நாடுவது பலவீனமானது அல்ல. அதற்காக நாம் வருத்தப்படவோ அச்சப்படவோ தேவையில்லை.
நம் மீது அக்கறை கொண்டவரிடம் அதை பகிர்வதில் தப்பில்லை. பிறர் நம்மிடம் பகிர்ந்தால் “எல்லாம் உன் மனசுல தான் இருக்கு, இதற்கெல்லாம் கவலைப்படலாமா?, நீயே தைரியமா சமாளிக்கணும் என்று சொல்லுங்கள்