கிரீன் டீ என்பது இயற்கையான நச்சு நீக்கியாகும். இதை ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த எலுமிச்சையுடன் கலந்து பருகும்போது உடல் எடையை குறைக்க உதவுகிறது.
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, நசுக்கிய இஞ்சி மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நச்சுத்தன்மை நீங்கி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
வெள்ளரிக்காய், எலுமிச்சை, சில புதினா இலைகள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை நீரில் போட்டு வைத்து, நாள் முழுவதும் குடிக்கவும்.
ப்ளெண்ட் செய்த பீட்ரூட்டில் சில புதினா இலைகள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குடிக்கவும். பீட்ரூட்டில் உள்ள நார்ச்சத்து நிறைவான உணர்வைத் தருகிறது, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
ஒரு லிட்டர் தண்ணீரில் சில ஸ்ட்ராபெர்ரிக்கள், சில புதினா இலைகள் மற்றும் ஒரு இலவங்கப்பட்டையை போட்டு வைத்து குடிக்கவும். இது தொப்பை குறைய உதவும்.
அன்னாசிப்பழச் சாறுடன் எலுமிச்சைச் சாறு, மேப்பிள் சிரப், மிளகுப்பொடி, சீரகத் தூள் மற்றும் உப்பு சேர்த்து உட்கொள்ளவும்.
நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி -ஐ உடனடியாக பெற, ஆரஞ்சு மற்றும் கேரட் கலந்த ஸ்மூத்தியில் கொத்தமல்லி இலைகள், தேன், உப்பு மற்றும் சீரகத் தூள் சேர்த்து குடிகவும்.