பல நூற்றாண்டுகளாக, தேன் அதன் இனிமையான சுவைக்காக மட்டுமல்ல, அதன் மருத்துவ குணங்களுக்காகவும் போற்றப்படுகிறது
சரியான முறையில் தேன் பயன்படுத்தப்பட்டால், அது வாதம் பித்தம் கபம் ஆகிய பிரச்சனைகளைப் போக்கும் என ஆயுர்வேதம் கூறுகிறது
பண்டைய மரபுகளில் தங்க அமிர்தம் என கொண்டாடப்படும் தேன், குளிர்காலத்தில் ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்துகிறது
தொண்டை அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்பட்டால், தேன் உதவுகிறது. மற்றொரு ஆய்வில், தேன் சளி சுரப்பைக் குறைக்கும், எனவே ஈரமான மற்றும் வறண்ட இருமலுக்கு உதவுகிறது.
காலை சிற்றுண்டியிலோ அல்லது தேநீரில் ஒரு துளி தேனை சேர்த்துக் கொண்டால் கூட போதும். அது நாள் முழுவதும் ஆற்றலை வழங்கும்.
தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன, அவை வைரஸை எதிர்த்துப் போராடும் மற்றும் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன.
தேனுடன் கற்றாழையை கலந்து, சருமத்தில் பூசி 15-20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால், சரும வெடிப்பு பிரச்சனை தீரும்.
இரவில் உறங்குவதற்கு முன் ஒரு சூடான கிளாஸ் பாலில் தேன் கலந்து பருகினால், இரவு தூக்கம் அருமையாக இருக்கும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை