கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் புரோட்டீன் ஆகியவை நிறைந்த பால் மற்றும் அது சார்ந்த பொருட்கள் நரம்பு மண்டலத்திற்கு ஊட்டச்சத்தினை அளிக்கக்கூடியதாகும்.
உலர் பழங்களில் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. உங்கள் உடலின் நரம்புகளுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து இது.
மீன் உணவுகளில் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நரம்புகளுக்கு மிகவும் முக்கியம். இது நரம்புகளுக்கு பலம் தரும்.
வைட்டமின் பி, சி, ஈ, மெக்னீசியம், தாமிரம், ஃபோலேட் மற்றும் கால்சியம் ஆகியவை பச்சை காய்கறிகளில், அதிக அளவில் காணப்படுகின்றன. இது உங்கள் நரம்புகளின் பலவீனத்தை நீக்குகிறது.
கிரீன் டீ நரம்பு சம்பந்தமான நோய்களை தடுப்பதுடன், இதயம் சார்ந்த நோய்கள் வராமலும் இது பாதுக்காக்கிறது.
வெண்ணெய் பழத்தில் இருக்கும் வைட்டமின் டி மற்றும் கே ஆகியவை நரம்பு மண்டலத்திற்கு வலுவூட்டி ஸ்ட்ரோக் போன்ற நோய்களில் இருந்து நம்மை காக்கிறது
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது