கேழ்வரகு நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது, ரத்த சோகை உள்ளவர்களுக்கு ஆரோக்கியமானது, எலும்புகளை வலுவாக்கும் என இதன் ஆரோக்கிய பண்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்
ராகியை பலவிதமாக சமைத்து உண்ணலாம். எப்படி உண்டாலும் ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் ராகியின் மாவை, கஞ்சியாக வைத்து குடிக்கலாம்
ராகியில் இரும்புச்சத்து, கால்சியம் சத்து அதிக அளவில் உள்ளது. ராகியை களியாக செய்து அதனுடன் கீரை சேர்த்து சாப்பிட்டால் அனீமியா, ரத்த குறைபாடு என எந்த நோயுமே வராது
ராகி மாவில் இட்லி செய்து உண்பதால், ஆரோக்கியம் மேம்படும். ஏனென்றால், இட்லியாக செய்யும்போது ஆவியில் வேக வைப்பதால், அதன் ஊட்டச்சத்து மதிப்பு குறையாமல் அப்படியே முழுமையாக கிடைக்கிறது
ராகி தோசை மிகவும் பிரபலமானது. உணவுகளில் ராகி தோசையின் சுவை அனைவருக்கும் பிடித்தமானது
ராகியை அப்படியே பயன்படுத்தலாம், முளை கட்டியும் பயன்படுத்தலாம். முளை கட்டி பயன்படுத்தினால், ஊட்டச்சத்து மதிப்பு இரட்டிப்பாகும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை