நீரிழிவு நோயாளிகளுக்கு கோடைக்காலத்தில் நீரிழப்பு அதிகமாக ஏற்பட்டு சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது
நீரிழிவு தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்து இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில கோடைக்கால டிப்ஸ் பற்றி இங்கே காணலாம்
கோடை காலத்தில் உடலில் போதுமான நீர்ச்சத்து இருக்க வேண்டியது மிக அவசியமாகும். எலுமிச்சை சாறு நீர்ச்சத்தை அளிப்பதுடன் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கின்றது
சர்க்கரை நோயாளிகள் கோடைகாலத்தில் மதுபானம் அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இது சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கக்கூடும்
கோடைகாலத்தில் வெயிலுக்கு பயந்து வெளியே செல்லாமல் இருக்கிறோம். எனினும் மாலை வேளையிலோ அல்லது அதிகாலையிலோ யோகாசனம் நடைபயிற்சி போன்றவற்றை செய்வது நல்லது
பழங்கள் மற்றும் காய்களில் அதிக அளவில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. சக்கரை அளவில் கட்டுக்குள் வைத்து உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க கோடைகாலத்தில் அதிக அளவில் காய்கள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும்
கோடை காலத்தில் மட்டுமில்லாமல் அனைத்து வேளைகளிலும் இரத்த சர்க்கரை அளவை அவ்வப்போது பரிசோதிப்பது நல்லது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.