எலுமிச்சையில் ஊட்டசத்து மட்டுமல்லாது பல்வேறு மருத்துவ குணங்களும் நிரம்பியுள்ளது.
எலுமிச்சைப் பழச்சாறை இளஞ்சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் உடல் எடை வியக்கத்தக்க வகையில் குறையும்.
செரிமானப் பிரச்சனைகள், குமட்டல், வாந்தி, போன்ற சிக்கல்களுக்கெல்லாம் எலுமிச்சைப் பழச்சாறு சரியான நிவாரணியாக செயல்படுகிறது.
கல்லீரலுக்கு எலுமிச்சை சிறந்தது, வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து காலை உணவுக்கு முன் குடிக்க நச்சுக்கள் நீங்கும்
எலுமிச்சை டையூரிடிக் பண்பு கொண்டுள்ளதால் வாத நோய் மற்றும் கீல்வாத வலியை ஆற்ற உதவுகிறது.
எலுமிச்சை பல்வேறு புற்றுநோய்களின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியை தடுக்கிறது.
எலுமிச்சை சோர்வை நீக்கி புத்துணர்வு அளிக்கிறது.
எலுமிச்சை கொழுப்பை கரைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
தினமும் எலுமிச்சைச் சாறு குடிப்பதால் சிறுநீரில் உள்ள சிட்ராஸ் அளவை குறைந்து சிறுநீரகத்தில் கல் சேர்வதைத் தடுக்கிறது.
எலுமிச்சை சாறு காயங்களில் ஏற்படும் இரத்தப்போக்கை நிறுத்துவதோடு, குணப்படுத்துவதை துரிதப்படுத்துகிறது.
எலுமிச்சை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும் நல்ல ஆக்ஸிஜனேற்றியாகும்