மாறிவரும் இன்றைய வாழ்க்கை முறையில், வாழ்க்கையில் ஜெயிக்க நமக்கு மிகுந்த எனர்ஜி தேவைப்படுகிறது.
நம் உடலின் ஆக்ஸிஜன் அளவு சரியாக இருந்தால், நம்மால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்பதோடு, சுவாசப் பிரச்சனைகளும் நம்மை அண்டாமல் நுரையீரல் வலுவாக இருக்கும்.
இன்றைய மாசு நிறைந்த சுற்றுசூழல் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக சுவாச பிரச்சனை உள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது
உங்கள் உணவில் சில பழங்களை சேர்த்துக் கொண்டால் போதும். இவை உடலில் ஆக்சிஜன் அளவை சரி செய்து எனர்ஜியை அள்ளித் தருகிறது.
பேரிக்காய்களை உணவில் சேர்த்துக்கொள்வது இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், புரதம், நார்ச்சத்து மற்றும் தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
பப்பாளியில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரதங்கள், வைட்டமின்கள் ஏ, பி, சி போன்ற சத்துக்கள் உள்ளன. இது உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது.
கிவி புளிப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்டது. இதனை சாப்பிடுவது உடலில் இரத்த ஆக்ஸிஜனை அதிகரிக்க உதவும் . இதனுடன் இதை உட்கொள்வதால் உங்கள் முகத்தில் பொலிவும் ஏற்படும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்.