சில உணவுகளில் உள்ள மருத்துவ குணங்களால், அவற்றை உயர் இரத்த அழுத்தத்திற்கான சூப்பர் உணவுகள் என கூறலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
இரத்த அழுத்தம் உயரும் போது, உடலின், சிறுநீரகம், இதயம், தமனிகள், மூளை போன்றவற்றை பாதிக்கிறது.
உயர் இரத்த அழுத்தம் இரத்த நாளங்கள் சுருங்கும் நிலையை ஏற்படுத்தும் நிலையில், ஒரு கிண்ணம் மாதுளை நல்ல பலனைத் தரும்.
உயர் இரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்தும் அதிசய பழமான நாவல் பழம் அதிக கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதிலும் சிறந்தது.
நாவல் பழத்தில் பொட்டாசியம் உள்ளதால் இது மிகவும் தசைகளுக்கு நல்லது.
பீட்ரூட்டில், இயற்கை நைட்ரேட்டுகள் இருப்பதால், ஒலிம்பியன்களுக்கு இது ஒரு சிறந்த உணவாக இருந்து வருகிறது.
ஒரு கிளாஸ் பீட்ரூட் சாறு அல்லது சமைத்த பீட்ரூட் உண்ணும் போது, 2-3 மணிநேரத்தில் உயர் இரத்த அழுத்த அளவு கணிசமாக குறையும்.
பூண்டு அல்லிசின் என்ற இயற்கை கலவையை உற்பத்தி செய்வதால் பூண்டு பல ஆண்டுகளாக மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.
பூண்டு இரத்த அழுத்தத்தை உடனடியாகக் குறைக்கும் என்பதால், உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் அன்றாட உணவில் சேர்க்கப்பட வேண்டும்.
வெந்தயம் மற்றும் வெந்தய கீரை இரண்டிலும் நார்ச்சத்து, கால்சியம் நிறைந்துள்ளதுடன், உடலில் LDL/TG அளவைக் குறைக்கின்றன.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதால் இரத்த அழுத்தம் குறைகிறது. எனவே உணவில் வெந்தயம்/ வெந்தய கீரை நிச்சயம் இருக்கட்டும்.
தமனிகள் சிறப்பாகச் செயல்பட உதவும் தர்பூசணி உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.