உடல் பருமன் நம்மில் பலரை பாடாய் படுத்தி வருகிறது. இதனால் இன்னும் பல நோய்களும் நம்மை ஆட்கொள்கின்றன.
உடல் பருமனை கட்டுப்படுத்த உதவும் காய்கறி சாறுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்
புரதசத்து, நீர்சத்து, ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள், ஃபோலேட் நார்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்புசத்து ஆகியவை உள்ள பீட்ரூட் ஜூஸ் உடல் எடையை குறைக்க உதவும்.
நார்ச்சத்து, ஃபோலேட், இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை உள்ள கீரைச்சாற்றை தினமும் குடித்தால் தொப்பை குறைந்து உடல் எடையும் குறையும்.
கேரட் சாற்றில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது ஒட்டொமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது.
முட்டைக்கோஸில் நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறி. இதனை உட்கொள்வதால், வாயு மற்றும் அஜீரணம் தொல்லைகள் நீங்கி உடல் பருமன் குறையும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இவற்றை உறுதிப்படுத்தவில்லை.