உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருப்பது பல உடல்நலப் பிரச்சனைகளை உண்டாக்கும்.
சமையலறையில் இருக்கும் ஒரு மசாலா பொருளை வைத்து வெற்றிகரமாக யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தலாம்.
வெந்தய விதைகள் யூரிக் அமிலத்தைக் குறைப்பதில் நன்மை பயக்கும்.
வெந்தயம் வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிப்பதால் மூட்டுவலி சிகிச்சைக்கும் உதவும். உடலில் உள்ள உள் மற்றும் வெளிப்புற வீக்கத்தைக் குறைக்க வெந்தயம் உதவுகிறது.
வெந்தயத்தை தினசரி உட்கொண்டால் யூரிக் அமிலத்தை எளிதாக கட்டுப்படுத்தலாம் என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் தேநீராக குடிக்கலாம்.
ஒரு டீஸ்பூன் வெந்தயப் பொடியை ஒரு நாளைக்கு இரண்டு முறை, உணவுக்கு முன் மற்றும் படுக்கைக்கு முன், சூடான பால் அல்லது தண்ணீருடன் உட்கொண்டால் யூரில் அமிலம் கட்டுப்படும்.
ஒரு ஸ்பூன் வெந்தயத்தை அரை கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் ஊறவைத்த விதைகளை மென்று தண்ணீர் குடித்தால் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தலாம்.