2013-14 ஐபிஎல் சீசனில் சஞ்சனா கணேசனும், பும்ராவும் முதலில் சந்தித்தனர்.
அப்போது சஞ்சனா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பணியாற்றியபோது, அவர் பும்ராவை நேர்காணல் செய்தார்.
பலரைப் போலவே இவர்களின் காதலும் நட்பில் தொடங்கியது.
இருவரும் சில காலத்திற்கு பேசவே இல்லையாம். இருவரும் ஒருவருக்கொருவர் திமிர் பிடித்தவர்களாக நினைத்துள்ளனர்.
2019 உலகக் கோப்பை தொடரில் சந்தித்தபோது, இருவருக்குள்ளும் மீண்டும் தீப்பொறி பறந்துள்ளது.
இவர்களின் காதல், திருமணத்தில் முடிந்தது. 2021 மார்ச் 15ஆம் தேதி கோவாவில் திருமணம் நடந்தது.
திருமணமாகி இரண்டு வருடங்களுக்கு பின், அதாவது கடந்த செப்டம்பர் மாதம் அங்கத் என்ற மகனை இந்த தம்பதி பெற்றெடுத்தது.