தலைவலி வந்த உடனே மாத்திரை போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால், அதிக அளவில் வலி நிவாரணி எடுத்துக் கொள்வது, உடலுக்கு கேடானது. அதற்கு பதிலாக உடனடி தீர்வைத் தரும் எளிய வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம்.
புதினா எண்ணெயை, தேய்த்து கொண்டால் தலைவலிக்கு சிறந்த வலி நிவாரணியாக இருக்கும். இந்த எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் இறுக்கமான தசைகளை தளர்த்தில், தலைவலிக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது.
பட்டையை சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து பசைபோலாக்கி, அதனை நெற்றியில் பற்றுப்போல தடவ வேண்டும். இதனைத் தடவினால் தலைவலி கணப்பொழுதில் மறைந்து போவதை உணரலாம்.
சுக்கு பொடியை நீர் விட்டு குழைத்து தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகிவிடும். மேலும் சுக்கு கலந்த நீரை குடிப்பதும் பலன் தரும்
ஒரு டம்ளரில் வெந்நீர் எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கலந்து குடித்தால் உடனடியாகத் தலைவலியின் தீவிரம் குறைவதை உணரலாம்.
சிறிது இஞ்சி, சீரகம், தனியா ஆகியவற்றை சிறிது தண்ணீரில் போட்டு, 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து, வடிகட்டி அருந்த தலைவலி இருந்து விடுபடலாம்.
காலையில் எழுந்தவுடன் தலைவலி வருவதற்கு தண்ணீர் பற்றாக்குறையும் காரணமாக இருக்கலாம். போதுமான அளவு தண்ணீர் அருந்துவது மிக முக்கியம்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.