நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இன்னும் இதனால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. சுகர் லெவல் அதிகரிக்காமல் தடுக்க உதவும் உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நார்ச்சத்து அதிகம் உள்ள கொண்டைக்கடலையை சுகர் நோயாளிகள் உட்கொள்ளலாம். இதன் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.
சியா விதைகளில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கி இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகின்றது.
வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இன்சுலின் சென்சிடிவிடியை கட்டுப்படுத்தி இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகின்றது.
கரையக்கூடிய நார்ச்சத்து மட்டுமல்லாமல் இன்னும் பல வித ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள கொய்யாப்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழமாகும்.
நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஆகியவை அடங்கியுள்ள ப்ரோக்கோலியை சுகர் நோயாளிகள் தங்கள் உணவில் அவ்வப்போது உட்கொள்ள வேண்டும்.
கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ள ஓட்ஸ் நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த காலை உணவாக பார்க்கப்படுகின்றது.
பாதாம், பிஸ்தா பருப்பு, அக்ரூட் பருப்பு ஆகியவற்றில் நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதச்சத்து ஆகியவை நிறைந்துள்ளதால் இவை நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.