வாழ்க்கையில் அனைத்திலும் வெற்றி பெற உடல் ஆரோக்கியத்துடன், ஒரு நபருக்கு மன உறுதியும், சுறுசுறுப்பான மூளையும் மிகவும் முக்கியம்.
மூளையை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்திலிருந்து பாதுகாக்கும் பீட்ரூட், மூளைக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.
ப்ரோக்கோலியில் உள்ள கோலின் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. அதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
மூளையின் ஆரோக்கியத்திற்கு அவசியமான வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் உள்ள கேரட் மூளை வளர்ச்சிக்கும் ஆற்றலுக்கும் உதவுகிறது.
கத்தரிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மூளையை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாத்து ஆற்றல் குறையாமல் வைக்கிறது.
மூளை ஆற்றலுக்கு தேவையான மெக்னீசியம் அதிகம் கொண்ட பூசணிக்காய், மூளையை சூப்பர்மேனாக ஆக்க வல்லது.
மூளை ஆற்றலுக்கு தேவையான ஃபோலேட்டுடன், வைட்டமின்-பி, வைட்டமின்-சி நிறைந்துள்ள குடைமிளகாய், மூளையை ஆற்றலுடன் வைக்கிறது.
லைகோபீன் நிறைந்த தக்காளி, மூளையை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாப்பதோடு அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.