பப்பாளி எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது என்றாலும், அளவிற்கு அதிகமானால் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
பப்பாளி ரத்தத்தை மெலிதாக்கும் தன்மை கொண்டது. எனவே ரத்தத்தை மெலிதாக்கும் மருந்து எடுத்துக் கொள்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அளவிற்கு அதிக பப்பாளி இதயத் துடிப்பை குறைக்கும் என்பதால் இதய நோய் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
பப்பாளியில் பப்பேன் என்னும் கலவை அதிக அளவில் எடுத்துக் கொள்ளப்படும் போது உணவுக் குழாயில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
அளவிற்கு அதிக பப்பாளி, சிறுநீரகத்தில் கல் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது. எனவே, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
பப்பாளி, குறிப்பக பழுக்காத பப்பாளியை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் கருச்சிதைவு ஏற்படலாம்.
பப்பாளியில் பீட்டா கேரோட்டின் அதிகம் இருப்பதால், சருமத்தில் மஞ்சள் அல்லது இளம் சிவப்பு திட்டுகள் ஏற்படலாம்.
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.