இந்த செயலியை உடனே உங்கள் மொபைலில் இருந்து டெலீட் பண்ணுங்க
டேட்டிங் செயலிகள் யூசர்களின் தனிப்பட்ட தகவல்களை பெற்று விற்பனை செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு டேட்டிங் செயலியானது உங்களுக்கு விருப்பமான ஆண் துணையையோ? அல்லது பெண் துணையையோ பெற வழி வகுக்கிறது.
இதற்காக உங்களுடைய புகைப்படம், முகவரி, வயது உள்ளிட்ட பிற தனிப்பட்ட தகவல்களை பெறுகிறது இந்த டேட்டிங் செயலிகள்.
ஃபயர் ஃபாக்ஸ் நிறுவனத்தின் மோசில்லா நடத்திய ஒரு ஆய்வில், டேட்டிங் செயலிகள் தனிப்பட்ட தகவல்களை திருடுவதாக கண்டுபிடித்துள்ளது
புகைப்படம், மொபைல் எண் உள்ளிட்ட பல தனிப்பட்ட தகவல்களை திருடி வேறு தனியாருக்கு விற்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது
Hinge, Tinder, OKCupid, Match, Plenty of Fish பிளாக் பீப்பிள் மீட் ஆகிய செயலிகள் பயனர்களின் லொகேஷன் தகவல்களை துல்லியமாக அணுகக்கூடிய வசதிகளை பெற்றுள்ளன என்றும் எச்சரிக்கை
சில நேரங்களில் அந்த டேட்டிங் செயலிகளை நாம் இயக்கவில்லை என்றாலும் பேக்ரவுண்டில் அது செயல்பட்டு பாஸ்வேர்ட் போன்ற தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதாகவும் தகவல்
ஆகவே எப்பொழுதும் ஒரு டேட்டிங் செயலியை பயன்படுத்தும் போது Third Party செயலிகள் மூலம் அதனை பயன்படுத்த வேண்டாம்
அந்த செயலில் உள்ள செட்டிங்ஸை அவ்வப்போது சரி பார்த்து தேவையற்ற அணுகல்களுக்கான வசதியை இடை நிறுத்துமாறு வல்லுனர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆனால் எப்போது இந்த வகை செயலிகளை பயன்படுத்தும்போது கணவத்துடன் இருக்க வேண்டும்.