இளம் வயதிலேயே முதுமையான தோற்றத்தை உண்டாக்கும் சில உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்வதால், இந்த பிரச்சனையை தடுக்க முடியும்
சோடா சேர்த்த குளிர்பானங்களை தொடர்ந்து குடித்தால் உடலில் உள்ள நீர் வற்றி, சருமம் பாதிக்கப்படும். இதனால் விரைவில் வயதான தோற்றம் ஏற்படும்.
துரித உணவுகளை அதிகம் சாப்பிட்டால், கொழுப்பு அதிகமாகி, ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனாலும் வயதான தோற்றம், வெகுவிரைவிலேயே ஏற்படும்.
அதிக அளவில் இறைச்சி உட்கொள்வதால் உடலில் நச்சுகள் குவிந்து கொழுப்பு அதிகரிக்கிறது. இதனால் முதுமை நிலையை, இளமையிலேயே அடைகிறீர்கள்.
உப்பு அதிக ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். தோலின் இறுக்கமான தன்மை சுருங்கி வயதானவர்கள் போன்ற தோற்றம் விரைவில் ஏற்படும்.
மது அருந்துபவர்களுக்கு அதிகமாக தண்ணீர் இழப்பு ஏற்படும். இதனால், விரைவிலேயே தோல் பாதிக்கப்பட்டு, வயதானவர்கள் போன்ற தோற்றத்தை பெறுவார்கள்.
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.