இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால் பல வித உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது மிக அவசியமாகும்.
இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் காய்கள் பற்றி இங்கே காணலாம்.
கசப்பு சுவை கொண்ட பாகற்காய் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. சுகர் நோயாளிகள் தினமும் காலை வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடிப்பது நாள் முழுதும் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க உதவும்.
சுகர் நோயாளிகளுக்கு ப்ரோக்கோலி மிகவும் ஏற்ற காயாக கருதப்படுகின்றது. இதில் அதிக புரதச்சத்து அதிகமாக உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதோடு செரிமானத்தையும் சீராக்க உதவுகிறது.
சுகர் நோயாளிகள் அதிக அளவில் சாப்பிடலாம். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதோடு உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றது.
நீரிழிவு நோயாளிகளுக்கு சுரைக்காய் மிக நல்லது. இதில் நார்ச்சத்து அதிகமாகவும் கொழுப்பு குறைவாகவும் உள்ளது. இது சுலர் லெவலை குறைக்க உதவும்.
கீரையில் அதிக அளவு மெக்னீஷியம், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. இது இன்சுலின் சென்சிடிவிட்டியை சீராக்கி இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கின்றது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.