ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி பூஜைகள் சிறப்பாக நடைபெற்று முடிந்தது
காக்கும் கணபதியை அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கும் வைபவம் அடுத்து நடைபெறவிருக்கிறது...
விநாயகரை அவரது பெற்றோரான சிவன் மற்றும் பார்வதியின் வீட்டிற்கு அனுப்பி வைப்பதை விசர்ஜனம் என்று அழைக்கிறோம்
ஆதியும் அந்தமுமான பரஞ்சோதியின் மகன், இயற்கையுடன் ஒன்றியவர். நம் வீட்டிற்க்கு வந்த கணபதியை நீர்நிலைகளில் கரைத்தால், அவர் தனது பெற்றோரிடம் சென்று சேர்ந்துவிடுவார் என்பது நம்பிக்கை
பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கும் வைபவம், இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும், அது ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு நாட்களில் அனுசரிக்கப்படுகிறது
தென் மாநிலங்கள், குறிப்பாக தமிழ்நாட்டி, விநாயகர் சதுர்த்தியின் மூன்றாம் நாள் அல்லது ஐந்தாம் நாள் சிலைகள் கரைக்கப்படுவது வழக்கம்
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் விசர்ஜனம் செய்யப்படும் நாட்கள் மாறினாலும், வட இந்தியாவில் பொதுவாக பத்தாம் நாள் விநாயகர் விசரஜன் நடைபெறும்
பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது