ஆரோக்கியமாக வாழ்வதற்கு நமது உடலில் இருக்க வேண்டிய மிக முக்கியமான தாதுக்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம், இந்த தாதுக்கள் பற்றாகுறை ஏற்பட்டால், நோய்கள் வந்து சேரும்
கால்சியம் புரதம் வைட்டமின் என அடிக்கடி கேள்விப்படும் நமக்கு உடலுக்கு தேவையான தாதுக்கள் எவை என்று தெரிந்துக் கொள்வதும் அவசியம்
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கனிமங்கள் மிகவும் அவசியமானவை. அதில் மிகவும் முக்கியமானவை நான்கு
உடலின் முக்கிய செயல்பாடுகளுக்கு காரணமான பொட்டாசியம் குறாஇந்தால், பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படத் தொடங்கும். வாழைப்பழம், உருளைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, கீரையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது
குறைந்த அளவே தேவை என்றாலும், உடலுக்குத் தேவையான அளவு துத்தநாகத்தைப் பெறுவது அவசியம். தானியங்கள், உலர் பழங்கள் மற்றும் கடல் உணவுகள் போன்றவற்றில் துத்தநாக சத்து உள்ளது
எலும்பு ஆரோக்கியம், பசி உணர்வு, உற்சாகம் என பாஸ்பரஸின் தேவை உடலுக்கு அவசியமானது. உலர்பழங்கள், கடல் உணவுகள் மீன் என பல உணவுகளில் பாஸ்பரஸ் கனிமம் உள்ளது
பலவீனம், எரிச்சல், குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் இதயத்துடிப்பு சீரற்று போவதற்க்கு காரணம் மெக்னீசியம் குறைபாடு. பாதாம், பூசணி விதைகள், சியா விதைகள், கீரை, சோயாவில் மெக்னீசியம் கணிசமாக உள்ளது
இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை