கொலஸ்ட்ரால் அதிகமானால் அதனால், மாரடைப்பு, இதய கோளாறுகள் போன்ற பல வித உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
தினமும் சில பழங்களை சாப்பிடுவதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம். அந்த பழங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஆப்பிளில் பயோஆக்டிவ் பாலிஃபெனால்ஸ் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நல்ல அளவில் உள்ளன. இது கெட்ட கொழுப்பை கட்டுக்குள் வைப்பதோடு உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
அவகேடோ பழம் கெட்ட கொலஸ்ட்ராலை எரிப்பதுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவையும் அதிகரிக்கின்றது. இதில் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.
பாதாமி பழம் கல்லையே கரைத்துவிடும் என கூறுவதுண்டு. இது கொலஸ்ட்ராலை எளிதாக கரைத்து வெளியேற்றும். இதில் உள்ள பொடாசியம், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய பிரச்சனைகளை சரி செய்கிறது.
தினமும் மாதுளை சாப்பிட்டு வந்தால், நரம்புகளில் உள்ள கொலஸ்ட்ராலை எளிதாக வெளியேற்றலாம். இது இரத்த சோகைக்கும் நிவாரணம் அளிக்கின்றது.
நார்ச்சத்து அதிகமாக உள்ள பேரீச்சம்பழம் கொழுப்பை விரைவாக எரிப்பதுடன் ஹீமோகுளோபினையும் அதிகரிக்கின்றது. இது உடலுக்கு மிக நல்லது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.