இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, ஈ, கால்சியம், பொட்டாசியம், ஆண்டிஆக்ஸிடன்ட்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ள முருங்கை நீர் பல்வேறு நோய்களுக்கு நிவாரணம் அளிக்கின்றது.
இதில் உள்ள இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஹீமோகுளோபின் குறைப்பாட்டை போக்கி இரத்த சோகையை சரி செய்கின்றன.
முருங்கையில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி ஆகியவை சரும பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகின்றன.
எலும்புகள் வலுவாக இல்லாதவர்கள் தினமும் முருங்கை தண்ணீர் குடிக்கலாம். இதில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின்கள் எலும்புகளுக்கு வலுவூட்டுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி தொற்றுகளிலிருந்து காக்க முருங்கை நீரை தினமும் குடிப்பது மிக உதவியாக இருக்கும்.
இரத்த சர்க்கரை அளவை குறைத்து இன்சுலின் அளவுகளை கட்டுக்குள் வைப்பதால் முருங்கை கீரை மற்றும் முருங்கை இலை நீர் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்ததாக கருதப்படுகின்றன.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.