நடனக்கலை மிகவும் அற்புதமானது. அது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்க கூடியது.
தினமும் நடனம் ஆடுவது மனநிலை மாற்றத்தை ஏற்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.
நடனம் ஆடும் போது உடலில் இருந்து வெளியேறும் என்டார்ஃபின் ஹார்மோன், மன அழுத்தத்தை தூர விரட்டுகிறது.
நடனம் ஆடுவதால் தனிமை உணர்வு நீங்கி, மனதில் சந்தோஷம் நிறைந்திருக்கும்.
நடனம் ஆடும் போது, அதிக கலோரிகள் எரிக்கப்படுவதால், உடல் பருமன் மிக வேகமாக குறையும்.
எனவே வாழ்க்கையில் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க விரும்பினால், தினமும் உங்களுக்கு பிடித்த பாட்டை ஓடவிட்டு நடனம் ஆடவும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.