தற்போது வெயில் காலம் முடிவடைந்து மழைக்காலம் துவங்கி உள்ளது. இந்த சமயத்தில் சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.
ஸ்ட்ரீட் புட் கடைகளில் உள்ள உணவுகள் சுவையாக இருந்தாலும், இந்த காலத்தில் ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லை.
மழைக்காலத்தில் பச்சை காய்கறிகளில் அதிக ஈரப்பதம் இருக்கும். இதனால் செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
கடல் உணவுகளை மழை காலத்தில் சாப்பிட கூடாது. இந்த சமயத்தில் அதிக பாக்டீரியா இருக்க வாய்ப்புள்ளது.
மழை காலங்களில் பால் பொருட்களில் அதிக பாக்டீரியாக்கள் இருக்கும். இதனால் நோய்த்தொற்றுகள் ஏற்படலாம்.
மழைக்காலங்களில் காரமான உணவுகள் வயிற்றில் எரிச்சலை உண்டாக்கி செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும்.
மழை காலத்தில் குளிர் பானங்கள் செரிமான ஆரோக்கியத்தை சீர்குலைத்து நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும்.