பிரியாணி இலை என்றும் அழைக்கப்படும் பிரிஞ்சி இலை நீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்
பிரிஞ்சி இலையில் நீர்த்துப் போகும் தன்மை அதிகம் இருப்பதால் இது நச்சுகளை நீக்க சிறுநீரகத்திற்கு மிகவும் உதவியாக இருக்கிறது.
பிரிஞ்சி நீரை தினமும் குடித்து வந்தால் நம்முடைய செரிமானம் சீராகி உப்பசம், வாயுத்தொல்லை போன்றவற்றில் நிவாரணம் கிடைக்கும்
வெறும் வயிற்றில் பிரியாணி இலை தண்ணீரை குடித்து வந்தால் அது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்
பிரிஞ்சி இலையில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகமாக உள்ளன. இதன் காரணமாக இது திசு சேதத்தை தவிர்ப்பதோடு புற்றுநோய் வரும் அபாயத்தையும் குறைக்கின்றது
பிரிஞ்சி இலை தண்ணீரை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் செரிமானம் சீராகி, வளர்சிதை மாற்றம் மேன்மையடையும். உடல் எடை எளிதாக குறையும்
பிரியாணி இலையின் மணத்திற்கு மனம் மற்றும் மூளையை அமைதிப்படுத்தும் தன்மை உள்ளது. மன அழுத்தம், இருக்கம் ஆகியவற்றை குறைக்க இது உதவுகிறது
பிரிஞ்சி இலை நீர் சளி, இருமல் ஆகியவற்றை சரி செய்வதில் மிக உதவியாக இருக்கிறது