தசைகளின் வளர்ச்சிக்கும் உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கும், சீரான இயக்கத்திற்கும் புரோட்டடீன் சத்து மிகவும் அவசியமானது.
உடல் எடையை குறைக்க, உடலை கட்டாக வைக்க விரும்பும் நபர்கள் அனைவரும் புரதம் எடுத்துக் கொள்வதை வழக்கமாக பின்பற்றுகின்றனர்.
ஆனால் அளவிற்கு மிஞ்சிய புரோட்டீன் தீங்கு விளைவிக்கும். அதிக அளவு புரதம் விஷமாகும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
அதிக புரத உணவுகள் உடலில் அதிக அமிலத்தை உருவாக்கி, கால்சியம் இழப்புக்கு வழிவகுக்கும்.
அதிக புரத உணவு, சிறுநீரக கல் உருவாவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது.
உணவில் அதிக புரதம் - குறைந்த கார்போஹைட்ரேட்டு டயட் மனச்சோர்வு, பதற்றத்தை ஏற்படுத்தும்.
புரதத்தை ஜீரணிக்க உடலுக்கு நிறைய தண்ணீர் தேவை என்பதால், அதிக புரதத்தை உட்கொள்வது நீரிழப்புக்கு வழிவகுக்கும்.
உடல் எடையை குறைக்க அதிக புரதம் தேவை என்றாலும், அளவிற்கு அதிகமானால் எடை அதிகரிக்கும்.