இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் ஆரோக்கியமான பழங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பழமாக கொய்யாப்பழம் பார்க்கப்படுகின்றது. வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ள இந்த பழத்தை உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
இனிப்பான சுவை கொண்டிருந்தாலும், இதன் கிளைசெமிக் குறியீட்டு அளவு மிக குறைவாகும். இது இரத்த சர்க்கரை அளவை அதிகமாக உயர்த்தாது.
வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ள கிவி பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிக நல்லது.
சர்க்கரை அளவு குறைவாகவும் வைட்டமின்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகமாகவும் உள்ள தக்காளியை நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளலாம்.
ஆன்டிஆக்சிடென்ட்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ள பெர்ரி சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்
ஆப்பிள் உட்கொள்வதால், நீரிழிவு நோய் கட்டுக்குள் இருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.