உடலிலும் சில உணவுகளிலும் இயற்கையாக காணப்படும் பியூரின்கள் உடைபடும் போது உடல் யூரிக் அமிலத்தை உற்பத்தி செய்கிறது.
உடலில் யூரிக் அமிலம் அதிகமானால், அதன் படிவங்கள் மூட்டுகளில் உருவாகி, மூட்டு வலி, கீல்வாதம் ஆகியவை ஏற்படுகிறது.
யூரிக் அமிலத்தினால் குதிகால் வலியை அனுபவிப்பவர்கள், விட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு பழத்தை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்.
அன்னாசி பழத்தில் உள்ள நார்ச்சத்து பியூரினை ஜீரணிக்க உதவுவதால், யூரிக் அமிலம் சிறப்பாக கட்டுப்படுத்தப்படும்
பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் இ, ஃபோலேட் ஆகிய சத்துக்கள் உள்ள கிவி பழம் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த உதவும்.
ஸ்ட்ராபெர்ரியில் உள்ள நார்ச்சத்து கால்சியம், விட்டமின் சி, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துகின்றன.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.