இந்துப்பு துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் வளமான மூலமாகும்.
தொண்டைவலி, சளி, இருமல் போன்ற பிரச்சனையை சமாளிக்க வெதுவெதுப்பான நீரில் இந்துப்பை கலந்து வாய் கொப்பளிக்கவும்.
இந்துப்பு மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்யும். மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைத்து புத்துணர்ச்சியுடன் உணர வைக்கும்.
இந்துப்பை உட்கொள்வது உங்கள் வளர்சிதை மாற்ற செயல்முறையை மேம்படுத்தும். இதனால் உடல் பருமன் குறையும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் நெஞ்செரிச்சல், அசிடிட்டி, வயிற்றுப்புழுக்கள், மலச்சிக்கல், வயிற்று வலி மற்றும் வாந்தி உள்ளிட்ட செரிமான தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்துப்பு பயன்படுத்தப்படுகிறது.
இந்துப்புவில் பல்வேறு எலக்ட்ரோலைட்டுகள் இருப்பதால், தசைப்பிடிப்பு பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் இந்துப்பை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் தீர்வினை பெறலாம்.
பற்களில் வலி, வீக்கம் போன்ற ஈறு பிரச்சனைகளில் இருந்து விடுபட வெதுவெதுப்பான நீரில் இந்துப்பைக் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.