இந்திய சமையலறையில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்கள் உணவிற்கு மணமும் சுவையும் கொடுப்பதுடன் கூடவே, பல ஆரோக்கிய குணங்களை கொண்டுள்ளது.
சீரகம் உடலில் செரிமான அமைப்பை வலுவாக்குகிறது. காலையில் சீரக நீரை குடிப்பதால் வளர்சிதை மாற்றம் தூண்டப்பட்டு உடல் பருமன் குறையும்.
மாதவிடாய் காலங்களில் இஞ்சி கஷாயத்தை குடிப்பதால் வலி மற்றும் பிடிப்புகளில் நிவாரணம் கிடைப்பதுடன், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும். சளி தொல்லை நீங்கவும் உதவும்.
இலவங்கப்பட்டையில் இயற்கை சர்க்கரை இருப்பதால், இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்களுக்கு இது நன்மை பயக்கும். இலவங்கப்பட்டை வீக்கத்தைக் குறைப்பதற்கும், இதய ஆரோக்கியத்துக்கும் சிறந்தது.
மஞ்சளில் உள்ள குர்குமின் புற்றூநோய் உட்பட பல நோய்களுக்கான மாமருந்தாக உள்ளது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது வலி, காயம், நாள்பட்ட நோய்கள் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.
ஏலக்காயை சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் வராது. அதே சமயம் பிபி கட்டுக்குள் இருக்கும். உடலில் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.