சுரைக்காய்

சுரைக்காய் (Bottle gourd) என்பது பலருக்கு பிடிக்காத ஒரு காய்கறி. ஆனால், சுரைக்காய் சாப்பிடுவதால் ஒன்றல்ல, இரண்டல்ல பல வகைகளில் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

Vidya Gopalakrishnan
Sep 19,2023
';

உடல் எடை

உடல் எடையைக் குறைப்பதிலும் சுரைக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சுரைக்காயில் வைட்டமின்-சி, சோடியம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

';

எலும்பு

சுரைக்காய் சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடைகின்றன, ஏனெனில் அதில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.

';

மாரடைப்பு

சுரைக்காய் சாப்பிடுவது மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கிறது.உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் அளவு சீராகும். அதுமட்டுமின்றி, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

';

நரை முடி

கூந்தல் வலுப்பெற தினமும் ஒரு டம்ளர் சுரைக்காய் சாறு குடித்து வந்தால், முடி வளர்ச்சி அதிகரிக்கும். நரை முடி பிரச்சனை நீங்கும். இளமையிலேயே ஏற்படும் நரை முடி பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.

';

மன அழுத்தம்

நம்மில் பலர் மன அழுத்தத்தில் வாழ்கிறார்கள். இதன் காரணமாக பல நோய்களுக்கு அவர்கள் இலக்காகும் சூழல் உருவாகிறது. சுரைக்காய் சாப்பிடுவது மன அழுத்தத்தை குறைக்கிறது.

';

நீரிழிவு

சுரைக்காயில் 92% நீர் மற்றும் 8 சதவிகிதம் நார்ச்சத்து கொண்டது. சர்க்கரை மற்றும் குளுக்கோஸின் அளவு மிக குறைவு என்பதால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story