கொத்தரவரங்காய் எனப்படும் க்ளஸ்டர் பீன்ஸ் சுவையில் அற்புதமானது என கூற இயலாது. ஆனால் பல மருத்துவ குணங்கள் உள்ளன.
LDL அல்லது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் கொத்தரவரங்காய் இதயத்திற்கு இதமானது.
கொத்தவரங்காயில் கால்சியம் மட்டுமல்லாது பாஸ்பரஸ் சத்தும் உள்ளதால், எலும்புகளை வலிமையாக்குகின்றன.
கலோரிகள் குறைவாக கொண்ட கொத்தரவரங்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் சிறப்பாக குறைக்கலாம்
கொத்தவரங்காயில் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட காய்கறி. இதனால், இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதில்லை.
கொத்தரங்காயில் உள்ள நார்ச்சத்து, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் ஆகியவை இதய பிரச்சினைகள் வராமல் பாதுகாக்கின்றன.
நார்ச்சத்து நிறைந்துள்ள கொத்தவரங்காய் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவும். செரிமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.