காலையில், சிறிதளவு கிராம்பு தூள் கலந்த நீரை அருந்துவது, அல்லது இரு கிராம்பை வாயில் அடக்கிக் கொள்வதன் மூலம் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
கிராம்பில் உள்ள ஃபிளாவனாய்டுகள், மாங்கனீசு மற்றும் யூஜெனோல் எலும்பு அடர்த்தியை அதிகரித்து, எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
கிராம்புகளில் இருக்கும் யூஜெனோல் உடலை நச்சுத்தன்மையை நீக்கும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
நாள் முழுவதும் நிதானமாகவும் அமைதியாகவும் செயல்பட, மன அழுத்த எதிர்ப்பு பண்பு கொண்ட கிராம்பினை காலையில் எடுத்துக் கொண்டால் போதும்.
கிராம்புகளில் இருக்கும் யூஜெனோல் வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது தலைவலிக்கு தீர்வு தருகிறது.
கிராம்பு இன்சுலின் போல வேலை செய்து இரத்தத்திலிருந்து அதிகப்படியான சர்க்கரையை நீக்குகிறது.
கிராம்பில் யூஜெனால் உள்ளதால் தினமும் வாயில் கிராம்பை அடக்கிக் கொண்டால் பல்வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
கிராம்புகளில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது