பெரும் சீரக பொடியுடன் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
நித்திய கல்யாணி செடியின் இலைகளை உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில், 1 டீஸ்பூன் உலர்ந்த இலை பொடியை தண்ணீரில் கலந்து அருந்த வேண்டும்.
வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி நீங்கும்.
தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.
அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சமஅளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்.
வால்மிளகின் தூளை பாட்டிலில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
தினமும் காலையிலும், மாலையிலும் தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆறிவிடும்.