நுரையீரலில் அழுக்குகளும் நச்சுக்களும் சேர்வதால், பலவீனமடைந்து ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் புற்றுநோய், நுரையீரலில் நீர் நிரம்புதல் போன்ற நோய்களுக்கு ஆளாக நேரிடும்.
நுரையீரல் நோய்கள் அண்டாமல் இருக்கவும், நுரையீரல் வலுவாக இருக்கவும், நுரையீரல் நோய்களில் இருந்து விடுபடவும் சில உணவுகள் உதவும்.
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் இருப்பதால், சுவாசக் குழாயிலிருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது.
மஞ்சளில் நுரையீரல் நோய்களை குணப்படுத்தும் ஆன்டி - செப்டிக் ஆன்டி-வைரல் பண்புகளை கொண்டது.
வெல்லம் நுரையீரலில் சிக்கிய கார்பன் துகள்களை அகற்றி, மூச்சுக்குழாய் அழற்சி, மூச்சுத்திணறல், ஆஸ்துமா மற்றும் பிற சுவாசக் கோளாறுகளிலிருந்தும் பாதுகாக்கும்.
புரோட்டீனின் வளமான ஆதாரமான முட்டையில் அழற்சி எதிப்பு பண்புகள் நிறைந்துள்ளதால், நுரையீரலை காக்கிறது.
பூண்டில் உள்ள அல்லிசின் ஒரு ஆண்டிபயாடிக் முகவராக செயல்பட்டு சுவாச தொற்றுகளை குணப்படுத்துகிறது. ஆஸ்துமா நோயாளிகளுக்கு பூண்டு அதிசயங்களைச் செய்கிறது.
சுவாச பாதையில் உள்ள வீக்கத்தைக் குறைத்து நுரையீரலை பாதுகாக்கும், கிரீன் டீ பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் உணவுகளில் சுவாச பாதை அழற்சிகளை போக்கும் திறன் உள்ளது.
இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்து அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்.